Tuesday 6 August 2013

அறிமுகம்

யார் இந்த சித்தர்கள்?

சித்தர்கள் என்பவர்கள் பல யுகங்காலமாக அழியாமல் வாழ்ந்து வரும் இறைமனிதர்கள் . மனிதனாக பிறந்து  மனத்தை அடக்கி யோகம் , காயகல்பம் போன்ற முறைகள் மூலம் உடலை அழியாமல் பாதுகாத்து ஞானம் என்ற உன்னத இறை நிலை அடைந்த மஹா அவதாரங்கள். மரணம் ஒருவனுக்கு எதனால் நிகழ்கிறது என்பதை கண்டறிந்து அதை எப்படி தடுப்பது என்பதை கண்டு சித்தம் தெளிந்தவர்கள். அவர்கள் கண்ட அறிய தத்துவங்களை உலக மக்கள் பயன்பெற வேண்டி சுவடிகளில் குறிப்பிட்டு உள்ளனர். அவற்றில் பல மனிதர்களாலும் ,இயற்கையாலும் அழிக்கப்பட்டு விட்டது. ஒரு சில நூல்கள் தனி மனிதனால் மறைக்கப்பட்டு விட்டது. மிக சில நூல்கள் மட்டுமே தற்போது சில பெரியவர்களால் பதிக்கப்பட்டு இருக்கிறது.பொதுவாக சித்தர்கள் பதினெண் பேர் என்பது நாம் அறிந்திருப்போம், நவ கோடி சித்தர்கள் இந்த பூமியில் நம் கண்களுக்கு புலப்படாமல் உலவிக்கொண்டு இருக்கின்றனர்.சித்தர்களில் பதினெண் பேர் சிவனிடம் நேரடியாக ஞான உபதேசம் பெற்றதன் மூலம் அவர்களே அனைவருக்கும் மூத்தவர்கள் என்பது பல நூல்களின் மூலம் அறிய முடிகிறது. இந்த தளத்தில் பல சித்தர்களின் நூல்களை அவர்கள் கூறிய முறைகளை .விவாதிப்போம்...


                  சிவ     சிவ                                                             சிவ  சிவ


No comments:

Post a Comment